என் மலர்

  சினிமா

  விஜய் சேதுபதியின் சிந்துபாத் ரிலீஸ் தேதி அறிவிப்பு
  X

  விஜய் சேதுபதியின் சிந்துபாத் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அருண்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சிந்துபாத்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Sindhubaath
  விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் `சூப்பர் டீலக்ஸ்'. இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘சிந்துபாத்’ என்னும் படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

  பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கி இருக்கும் இப்படம் விஜய் சேதுபதியின் 26-வது படமாகும். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.  அருண்குமார் - விஜய் சேதுபதி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை மே 16ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். #Sindhubaath #VijaySethupathi
  Next Story
  ×