என் மலர்

  சினிமா

  சூர்யா - விஜய்குமார் புதிய கூட்டணி
  X

  சூர்யா - விஜய்குமார் புதிய கூட்டணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூர்யா தயாரிப்பில் உருவாகி இருக்கும் உறியடி 2 படத்தை இயக்கி நடித்திருக்கும் விஜய்குமார், சூர்யா - சுதா கொங்காரா இணையும் புதிய படத்திற்கு வசனம் எழுதவிருக்கிறார். #Suriya38 #SudhaKongara #VijayKumar
  அறிமுக இயக்குனர் விஜய் குமார் இயக்கி, நடித்து வெளியான ‘உறியடி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நடிகர் சூர்யா ‘உறியடி’ இரண்டாம் பாகத்தை தன்னுடைய 2டி என்டெர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.

  இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. சூர்யா பேசும்போது ‘படக்குழுவினர் இந்த படம் உங்களுக்கு ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்காது. உங்களை பாதிக்கும் ஒரு படமாக இருக்கும் என்று தெளிவாக சொன்னார்கள். அது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இயக்குனர் விஜயகுமாரை முதன்முறை சந்தித்தபோதே அவரது உண்மைத்தன்மை என்னை ஆச்சர்யப்படுத்தியது.  என் அப்பா படப்பிடிப்பு தளத்துக்கு வந்ததில்லை. எனக்காக யாரிடமும் வாய்ப்பு கேட்டதும் கிடையாது. ஒரு இயக்குநரைக்கூட சந்தித்தது கிடையாது. கதை கேட்டது கிடையாது. தயாரிப்பாளரை சந்தித்தது கிடையாது. இருந்தாலும், ‘நடிகரின் மகன்’ என்ற அடையாளம் எனக்கு இருக்கிறது. ஆனால், எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் ‘உறியடி’ என்ற படத்தை எடுத்து விஜய் குமார் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை நான் பாராட்டுகிறேன்.

  சூர்யா அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் படத்துக்கு விஜய்குமார் தான் வசனம் எழுதுகிறார். #Suriya38 #SudhaKongara #VijayKumar

  Next Story
  ×