என் மலர்
சினிமா

சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
‘என்.ஜி.கே.’, ‘காப்பான்’ படங்களை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படப்பிடிப்பு தளங்களை பார்வையிட படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது. #Suriya38 #SudhaKongara
சூர்யா நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாராகி வரும் படம் ‘என்.ஜி.கே.’. செல்வராகவன் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். சூர்யாவுக்கு ஜோடிகளாக ரகுல் பிரீத்திசிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார்.

கதநாயகியாக சாயிஷா நடிக்க, மோகன்லால், இந்தி நடிகர் பொம்மன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்குப் பிறகு, சூர்யா ‘இறுதிச் சுற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கிறார். சூர்யாவே தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்க இருக்கிறது. தற்போது லொகேஷன் பார்ப்பதற்காக ஒளிப்பதிவாளருடன் சண்டிகர் சென்றுள்ளார் சுதா கொங்காரா. மேலும் அமெரிக்காவிலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இதற்காக சூர்யா அமெரிக்கா செல்கிறார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Suriya #SudhaKongara #Suriya38
Next Story