என் மலர்
சினிமா

தனுசுடன் நடிப்பது குறித்து மஞ்சு வாரியர் கருத்து
வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தனுசுடன் நடிப்பதை எதிர்நோக்கி உற்சாகமாக உள்ளதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். #Asuran #Dhanush #ManjuWarrier
மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் மஞ்சு வாரியர், தனுஷின் `அசுரன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த படத்துக்கான கதாநாயகியாக பலரை பரிசீலித்து தற்போது மஞ்சு வாரியரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த கருத்தை குறிப்பிட்டு, மஞ்சு வாரியர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
`இது தான் எனது முதல் தமிழ் திரைப்படம். இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும். தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்றி. நானும் உற்சாகமாக உள்ளேன்'
இவ்வாறு கூறியுள்ளார்.
படப்பிடிப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 26-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. முதற்கட்ட திருநெல்வேலியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. #Asuran #Dhanush #ManjuWarirer
Next Story






