என் மலர்

  சினிமா

  தனுஷ் படத்திற்கு இசையமைப்பதை உறுதிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்
  X

  தனுஷ் படத்திற்கு இசையமைப்பதை உறுதிப்படுத்திய ஜி.வி.பிரகாஷ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆடுகளம் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகும் `அசுரன்' படத்திற்கு தான் இசையமைப்பதை ஜி.வி.பிரகாஷ் உறுதிப்படுத்தியுள்ளார். #Asuran #Dhanush #GVPrakashKumar
  இசையமைப்பாளராக அறிமுமகாகி நாயகனாக பிசியாகி இருக்கும் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக சர்வம் தாளமயம் ரிலீசாக இருக்கிறது. அடுத்ததாக 100% காதல், வாட்ச்மேன், ஐங்கரன், அடங்காதே, ஜெயில், குப்பத்து ராஜா என அடுத்தடுத்தது படங்கள் ரிலீசாக இருக்கிறது. மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். அதேநேரத்தில் இசையமைப்பதிலும் பிசியாக இருக்கிறார். 

  மயக்கம் என்ன படத்தின் போது ஏற்பட்ட சிறிய மனகசப்பால் தனுஷ் - ஜி.வி.பிரகாஷ் இணையாமல் இருந்தார்கள். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும், ஜெயில் படத்தில் தனுஷ் ஒரு பாடலை பாடியதன் மூலம் மீண்டும் இருவரும் இணைந்தார்கள். அதன்பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் `அசுரன்' படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. தற்போது ஜி.வி. அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.  தனுசை சந்தித்ததே பெரிய செய்தியாகி விட்டது. எப்போது மீண்டும் இணைகிறீர்கள் என்று அவரிடம் கேட்ட போது, ஆமாம். `அசுரன்' படத்துக்கு இசை அமைக்கிறேன். ஆடுகளம் படத்துக்கு பின் வெற்றிமாறன், தனுஷ், நான் மூவரும் இணைகிறோம். மிக சுவாரசியமான படமாக இருக்கும். சில வி‌ஷயங்கள் அதுவாக நடந்தது. மகிழ்ச்சி. என்றார். #Asuran #Dhanush #GVPrakashKumar

  Next Story
  ×