என் மலர்
சினிமா

ஆளப்போறான் தமிழன் படைத்த புதிய சாதனை
விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் புதிய சாதனை படைத்துள்ளது. #Vijay #Mersal #AalaporaanThamizhan
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது.
இதில் விஜய் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். படம் வெளியான பிறகு பல சாதனைகள் படைத்தது. குறிப்பாக இதில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பட்டிதொட்டி எங்கும் எதிரொலித்து சாதனை படைத்தது.

தற்போது யூடியூப்பில் ஆளப்போறான் தமிழன் பாடலை 90 மில்லியன் (9 கோடி) பார்வையாளர் பார்த்து ரசித்துள்ளனர். 9 கோடி பேர் பார்த்த முதல் தமிழ் பாடல் என்ற பெருமையை தற்போது பெற்றிருக்கிறது. விவேக் எழுதிய இந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Vijay #Mersal #AalaporaanThamizhan
Next Story