என் மலர்

  சினிமா

  என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள் - ஸ்ருதி ஹரிஹரன்
  X

  என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள் - ஸ்ருதி ஹரிஹரன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மீடூ இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்த ஸ்ருதி ஹரிஹரன், என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள் என்று கூறியிருக்கிறார். #SruthiHariharan #MeToo
  நிபுணன் படத்தில் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் தவறாக நடந்து கொண்டார் என அர்ஜுன் மீது ஸ்ருதி ஹரிஹரன் குற்றம் சாட்டினார். இதற்கு அர்ஜுன் மறுப்பு தெரிவித்ததோடு அவர் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் ஸ்ருதி ஹரிஹரனுக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்துள்ளன.

  இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இது என்னைக் காயப்படுத்தினாலும் பெருமை கொள்ளவும் செய்கிறது. நான் துன்பப்பட்டாலும் எதிர்காலத்தில் சில பெண்களாவது பயப்படாமல் துணிந்து பேசுவார்கள். இதை நடைமுறையில் எப்படி எதிர்கொள்வது என்பதைப் பார்க்க வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு வரை வாரத்திற்கு மூன்று பட வாய்ப்புகளாவது எனக்கு வரும்.

  நான் வித்தியாசமான திரைக்கதைகளை தேர்ந்தெடுப்பேன். வழக்கமாக நமது படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றால் தான் அடுத்த வாய்ப்புகள் வரும். செப்டம்பர் மாதம் எனது பெரிய படம் ஒன்று வெளியானது. ஆனால் அதன் பின் வாய்ப்புகள் வருவது நின்றுவிட்டது. படவாய்ப்புகள் மிகவும் குறைந்துவிட்டன. என்னுடன் இணைந்து பணியாற்ற தயங்குகிறார்கள்.  ஆனால் இயக்குனர்கள் நம்பிக்கையளிக்கும் விதமாக எனக்காக எழுதுகிறார்கள். இதன் மூலம் எனக்கு சில எதிரிகள் உருவாவார்கள் என்பது தெரியும். அதனால் இதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து போராடுவேன்’ என்றார்.
  Next Story
  ×