என் மலர்
சினிமா

கீர்த்தி சுரேஷின் வருத்தம்
நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகிய மூன்று படங்களிலுமே அவரது கதாபாத்திரம் பேசும்படியாக இல்லாததால் வருத்தத்தில் இருக்கிறாராம். #KeerthySuresh
கீர்த்தி சுரேசின் சினிமா வாழ்க்கை நடிகையர் திலகம் படத்துக்கு பின் மாறிவிட்டது. அவர் நடிக்கும் படங்களுக்கும் தேர்ந்தெடுக்கும் வேடங்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் அந்த எதிர்பார்ப்பை அதன் பிறகு வந்த படங்கள் பூர்த்தி செய்யவில்லை. சாமி 2, சண்டக்கோழி 2, சர்கார் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இவற்றில் சாமி 2 சரியாக போகவில்லை. மற்ற 2 படங்களிலும் வரலட்சுமியே பிரதானமாக இருந்தார். சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த சில காட்சிகளே இடம்பெற்றன. இதனால் இனி பெரிய ஹீரோக்கள் படங்களில் நடிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையில் இருக்கிறாராம்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்தால் காணாமல் போய்விடுவோம். எனவே பெரிய ஹீரோக்களுக்கு ஜோடியாகவும் நடிக்க வேண்டும். அப்படி நடிக்கும் படங்களின் கதையை கவனமாக கேட்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார். கதை கேட்கும்போதே இந்த காட்சிகள் அனைத்தும் படத்தில் இடம் பெற வேண்டும் என்று உறுதி வாங்கிக்கொள்கிறார். #KeerthySuresh
Next Story






