search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு
    X

    நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு

    நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #Arjun #MeToo
    அர்ஜூன் கதாநாயகனாக நடித்த படம் ‘நிபுணன்’.  இந்த படத்தில் பெங்களூருவை சேர்ந்த ஸ்ருதி ஹரிஹரன் கதாநாயகியாக நடித்தார்.  இந்த படப்பிடிப்பின்போது, அர்ஜூன் தன்னை இறுக்கமாக கட்டிப்பிடித்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் கூறினார்.

    ஸ்ருதி ஹரிஹரன் புகார் தொடர்பாக நடிகர் அர்ஜூன் தனது முகநூல் பக்கத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார். “நான் எந்த பெண்ணிடமும் தவறாக நடந்தது இல்லை. ஸ்ருதி ஹரிஹரன் புகாருக்கு பின்னால், வேறு யாரோ இருக்கிறார்கள்” என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார்.

    மேலும் தமது திரையுலக வாழ்வில் பெற்ற பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில், குற்றம்சாட்டிய நடிகை ஸ்ருதி ஹரிஹரனுக்கு எதிராக பெங்களூர் நகர் சிவில் கோர்ட்டில் ரூ. 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.



    இந்நிலையில், நடிகர் அர்ஜூன் மீது 4 பிரிவுகளில் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிபுணன் படத்தில் நடித்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    நடிகர் அர்ஜூன் மீது 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×