என் மலர்

  சினிமா

  சூர்யாவுடன் கைகோர்த்த உறியடி இயக்குநர் - முக்கிய அறிவிப்பு
  X

  சூர்யாவுடன் கைகோர்த்த உறியடி இயக்குநர் - முக்கிய அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் நடிகராக அறிமுகமான விஜய குமாரின் அடுத்த படமான உறியடி 2 படத்தை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். #Uriyadi2 #Uriyadi2FirstLook
  `உறியடி' படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் விஜய குமார். அரசியல் சம்பந்தப்பட்ட த்ரில்லர் படமாக உருவான `உறியடி' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.

  அதையும் விஜய குமாரே இயக்கி நடிக்கிறார். நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரிக்கிறார். இது தயாரிக்கும் 7-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை இயக்கி, நடிப்பதுடன் தனது சோவ்னீர் புரொடக்சன்ஸ் மூலம் இணை தயாரிப்பாளராகவும் விஜய்குமார் இணைந்திருக்கிறார்.

  விஜய குமார் ஜோடியாக கேரளாவை சேர்ந்த புதுமுகம் விஸ்மயா அறிமுகமாகிறார். மேலும் `மெட்ராஸ் சென்ட்ரல்' பிரபலம் சுதாகர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். `உறியடி' முதல் பாகத்தில் நடித்த ஷங்கர்தாஸ், அப்பாஸ் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.  விஜய்சேதுபதியின் `96' படத்தில் தனது இசையின் மூலம் அனைவரையும் கவர்ந்துள்ள கோவிந்த் மேனன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். உறியடி படத்தில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரவீண் குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். லினு என்ற புதுமுகம் படத்தொகுப்பையும், ஏழுமலை ஆதிகேசவன் கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

  பொழுதுபோக்கு அம்சங்களுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துடன் இந்தப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.

  உறியடி படம் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்த விஜய குமார், சூர்யா நிறுவனத்துடன் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. #Uriyadi2 #Uriyadi2FirstLook

  Next Story
  ×