என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா

X
தமிழுக்கு வரும் ஐஸ்வர்யா லட்சுமி
By
மாலை மலர்12 Sep 2018 11:54 AM GMT (Updated: 12 Sep 2018 11:54 AM GMT)

மலையாளத்தில் நிவின் பாலி, பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தற்போது தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #AishwaryaLakshmi
மலையாளம், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் ஏதேனும் ஒன்றில் அறிமுகமாகும் நாயகிகளின் அடுத்த இலக்கு தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைப்பதாகத்தான் இருக்கும்.
நயன்தாரா முதல் லட்சுமி மேனன் வரை உதாரணங்கள் கூறலாம். மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியும் இதில் சேர்ந்து இருக்கிறார். நிவின்பாலி நடித்த ‘நிஜாண்டுகலுதே நாட்டில் ஓரிடவேளா’ படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா அதைத் தொடர்ந்து மாயநதி படத்தின் மூலம் மலையாள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.
பகத் பாசிலுக்கு ஜோடியாக அவர் நடித்துவரும் வரதன் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இரண்டு மலையாளப் படங்களில் கவனம் செலுத்திவரும் இவர், தற்போது தமிழ்த் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா ஜோடி சேர்ந்து பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள்.

இந்தப் படத்தில் இரண்டாவது நாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமியும் இணைந்துள்ளார். குடும்ப பாங்கான அமைதியான கதாபாத்திரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழில் ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா மேனன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் இருக்கும் நிலையில் புதிதாக ஐஸ்வர்யா லட்சுமி இணைந்திருக்கிறார்.
Next Story
×