என் மலர்

  சினிமா

  5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
  X

  5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் - கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கயல் ஆனந்தி முதல்முறையாக டப்பிங் பேசியுள்ளார். #PariyerumPerumal #Kathir
  நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. 

  இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார்.
  முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். 

  இந்த படத்திற்காக முதல்முறையாக கயல் ஆனந்தி தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார். கயல் ஆனந்தி சினிமாவில் நடிக்க வந்து 5 ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில், படத்தில் அவரது கதாபாத்திரம் பூரணத்துவம் அடைய வேண்டும் என்பதற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் கேட்டதற்கு இணங்க, முதல்முறையாக தனது சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்க்கது.  சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசையை நடிகர் தனுஷ் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். படத்தின் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் வருகிற செப்டம்பர் 28-ந் தேதி ரிலீசாக இருக்கிறது. #PariyerumPerumal #Kathir #KayalAnanthi

  Next Story
  ×