என் மலர்

  சினிமா

  காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?
  X

  காஜல் அகர்வாலும், திரிஷாவும் இதற்கு அடிமையா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னணி நடிகைகளாக வலம் வரும் காஜல் அகர்வால், திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா ஆனந்த் ஆகியோர் பிரியாணிக்கு அடிமையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Kajal #Trisha #AishwaryaRajesh
  தென்னிந்திய நடிகைகளுக்கு சாப்பாட்டு வி‌ஷயத்தில் என்னென்ன பிடிக்கும் என்று பட்டியல் எடுத்தோம். அனுஷ்காவுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். சமீபகாலமாக ஏறிய உடல் எடையை குறைப்பதில் கவனம் செலுத்துவதால் சிக்கன் சாப்பிடுவதை நிறுத்தி இருக்கிறார்.

  தமன்னாவுக்கு வறுத்த உணவுகள் என்றால் பிரியம். வீட்டில் இருக்கும்போது டால் செய்து குடும்பத்தினருக்கு கொடுப்பார். லட்சுமி மேனனுக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். காஜல் அகர்வாலுக்கு ஐதராபாத் பிரியாணி என்றால் விருப்பம். தென் இந்தியா பக்கம் வந்தால் காரசாரமான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுவார். மும்பையில் இருக்கும்போது அந்தேரியில் இருக்கும் பானிபூரி கடைக்கு மாலையில் தவறாமல் சென்று சாப்பிடுவார். நன்றாக சமைப்பார்.  காஜல் செய்யும் தளி சாப்பாடுக்கு அவரது நண்பர்கள் அடிமை. பிரியா ஆனந்துக்கும் பிரியாணி தான் பிடிக்கும். திரிஷா 15 ஆண்டுகளாக ஒரே உடல் அமைப்பை வைத்திருந்தாலும் சாப்பாட்டு வி‌ஷயத்தில் எந்த கட்டுப்பாடும் கடைபிடித்ததில்லை. பிரியாணி வகை உணவுகளை ஒருபிடி பிடிப்பார். ஐஸ்வர்யா ராஜேசுக்கும் பிரியாணி என்றால் பிடிக்கும். நடு இரவு ஒரு மணிக்கு பிரியாணி கொடுத்தால் கூட சாப்பிடுவேன் என்று ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
  Next Story
  ×