என் மலர்

  சினிமா

  முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி
  X

  முதல்முறையாக சிம்புவுடன் கைகோர்க்கும் ஆதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுந்தர்.சி. இயக்கத்தில் நடிகர் சிம்பு தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்கவிருக்கும் நிலையில், அந்த படத்திற்கு இயைமைக்க ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #STR #Simbu
  அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பிறகு, சிம்பு நடிப்பில் அடுத்ததாக, `செக்கச்சிவந்த வானம்' வருகிற செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாக இருக்கிறது.

  சிம்பு அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார். அதேநேரத்தில் சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு இசையமைக்க ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  முன்னதாக ஹிப்ஹாப் ஆதி, சுந்தர்.சி இயக்கிய ஆம்பள படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து சுந்தர்.சியின் அரண்மனை 2, கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களுக்கும் ஆதியே இசைமைத்திருந்தார். அதுமட்டுமின்றி ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு படத்தை சுந்தர்.சி தான் தயாரித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.   இந்த படம் தெலுங்கில் பவண் கல்யாண், சமந்தா, பிரணிதா நடிப்பில் வெளியான ‘அத்தாரிந்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகிறது. 

  இவை தவிர கார்த்திக் நரேனின் படம் மற்றும் கவுதம் மேனனின் விண்ணைதாண்டி வருவாயா 2 ஆகிய படங்களிலும் சிம்பு நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #STR #Simbu #AttarintikiDaredi

  Next Story
  ×