என் மலர்

  சினிமா

  குடும்ப பெண்களுக்கு ஜோதிகாவின் 10 கட்டளைகள்
  X

  குடும்ப பெண்களுக்கு ஜோதிகாவின் 10 கட்டளைகள்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் காற்றின் மொழி படத்தில் குடும்ப பெண்களுக்கான 10 கட்டளைகள் உருவாக்கியிருந்தது பிடித்திருப்பதாக ஜோதிகா கூறியுள்ளார். #KaatrinMozhi #Jyothika
  ஜோதிகா திருமணத்துக்கு பின் நடிக்காமல் இருந்தார். 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தவர் தனக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்கள் கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது காற்றின் மொழி என்ற படத்தில் ராதா மோகன் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

  இதுபற்றி ஜோதிகா கூறும்போது ‘இது எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாகி விட்டது. அதனால் தான் நானே இப்படத்திற்கு டப்பிங் செய்து வருகிறேன். பெண்கள் சுயமாக சம்பாதித்து, தங்கள் வாழ்க்கையை தங்களுக்கு பிடித்தபடி வாழ வேண்டும் என்ற கருத்தை இப்படம் வலியுறுத்துகிறது.  அதற்கு அவர்கள் குடும்பத்தினரும் ஆதரவு தர வேண்டும். இத்தகைய பெண்களின் மேம்பாட்டிற்கு வழி காட்டும் 10 கட்டளைகளை உள்ளடக்கிய ஒரு போஸ்டர் டிசைன் காற்றின் மொழி படத்திற்கு உருவாக்கியது எனக்கு பிடித்து இருந்தது’ என்றார். #KaatrinMozhi #Jyothika

  Next Story
  ×