என் மலர்
சினிமா

சிம்புவுக்கு மாமியாராகும் குஷ்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சிம்பு, அடுத்ததாக சுந்தர்.சி. இயக்கத்தில் தெலுங்கு படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கும் நிலையில், அந்த படத்தில் சிம்புவின் மாமியாராக குஷ்பு நடிப்பதாக கூறப்படுகிறது. #STR #Simbu
சிம்பு தன்னை பற்றி தமிழ் சினிமாவில் நிலவும் எதிர்மறை கருத்துகளை மாற்ற சபதம் எடுத்து, படங்களை தேர்வு செய்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் `மாநாடு' என்ற அரசியல் படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் `மங்காத்தா' படத்தில் அஜித் நடித்தது போன்ற நெகட்டிவ் கதாபாத்திரம். அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். நேற்று இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது.
இது பவண் கல்யாண், சமந்தா, பிரணிதா நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அத்தாரிந்டிகி தாரேதி’ திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகிறது. இந்த படத்தில் பவன் கல்யாண் மாமியாராக நதியா முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். படத்தை சுந்தர்.சி இயக்குவதால், இந்த வேடத்தில் குஷ்பு நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

இவை தவிர கார்த்திக் நரேனின் படம் மற்றும் கவுதம் மேனனின் விண்ணை தாண்டி வருவாயா 2 ஆகிய படங்களில் சிம்பு நடிக்க உள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `செக்கச்சிவந்த வானம்' செப்டம்பர் 28-ம் தேதி வெளியாக உள்ளது. #STR #Simbu #AttarintikiDaredi
Next Story






