என் மலர்

  சினிமா

  இணையதளத்தில் வெளியான விஸ்வரூபம் 2 - படக்குழு அதிர்ச்சி
  X

  இணையதளத்தில் வெளியான விஸ்வரூபம் 2 - படக்குழு அதிர்ச்சி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி வெளியாகிய நிலையில், முழு படமும் இணையதளத்தில் வெளியாகி இருப்பது படக்குழுவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
  கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள `விஸ்வரூபம்-2' படம் கடந்த 10-ஆம் தேதி திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்துக்கு தடை விதிக்கும்படி கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனாலும் விநியோகஸ்தர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையால் தென் மாவட்டங்களில் சில இடங்களில் படம் வெளியாகவில்லை.

  சிலர் பிண்ணனியில் இருந்து படத்தை வெளியாக விடாமல் தடுக்கின்றனர் என்றும், பிரச்சினை சரியாகி அந்த மாவட்டங்களிலும் படம் திரைக்கு வந்து விடும் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

  இந்த நிலையில் விஸ்வரூபம்-2 முழு படமும் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  முன்னதாக ரஜினிகாந்தின் கபாலி, காலா உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் திரையிட்ட உடனேயே திருட்டுத்தனமாக படம்பிடித்து இணையதளங்களில் வெளியிட்டனர். சமீபத்தில் திரைக்கு வந்த விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்துமே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகின என்பதும் குறிப்பிடத்தக்கது. 

  திருட்டுத்தனமாக படத்தை வீடியோ எடுப்பவர்களை கண்டுபிடிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காகவே திருட்டு வீடியோ தடுப்பு குழு ஒன்றையும் நியமித்து உள்ளது. அவர்கள் கண்காணிப்பையும் மீறி, புதிய படங்கள் இணையதளங்களில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. #Vishwaroopam2 #KamalHaasan

  Next Story
  ×