என் மலர்
சினிமா

X
கருணாநிதி உடல்நிலை - நேரில் சென்று விசாரித்த கவுண்டமணி
By
மாலை மலர்1 Aug 2018 9:43 PM IST (Updated: 1 Aug 2018 9:43 PM IST)

திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து நடிகர் கவுண்டமணி மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். #Karunanidhi #Goundamani
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் நடிகர் விஜய், இன்று காலை காவேரி மருத்துவமனைக்கு நேரில் சென்று கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரித்தார். மாலையில் நடிகர் அஜித் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். அதுபோல் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியும் நேரில் சென்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார். #Karunanidhi #KauveryHospital #Goundamani
Next Story
×
X