என் மலர்
சினிமா

கிறிஸ்துமஸ் விடுமுறையை குறி வைத்த கார்த்தி
கடைக்குட்டி சிங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக நடித்து வரும் படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட இருக்கிறார்கள். #Karthi17
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது. அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இப்படத்தை இயக்கி வருகிறார்.
சூர்யாவின் ‘சிங்கம் 2’, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. ஹரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியது. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார், மேலும் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்கு) வில்லன் வம்சி ரவி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில், இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 21ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Next Story






