என் மலர்

  சினிமா

  பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா
  X

  பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் தமன்னா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கண்ணே கலைமானே படத்தை அடுத்து பிரபல நடிகருடன் தமன்னா மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Tamannah
  தமன்னா நடிப்பில் இறுதியாக ‘ஸ்கெட்ச்’ திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தை அடுத்து தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வந்தார். தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

  இந்நிலையில், இவர் அடுத்ததாக பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இணையும் புதிய படத்தை பார்த்திபன் இயக்க இருக்கிறார். இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பிரபுதேவா - தமன்னா கூட்டணியில் ஏற்கனவே ‘தேவி’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை விஜய் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
  Next Story
  ×