என் மலர்

  சினிமா

  ஆயுத பூஜையை குறிவைத்த விஷால்
  X

  ஆயுத பூஜையை குறிவைத்த விஷால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், தனது படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார். #Vishal #Sandakozhi2
  `இரும்புத்திரை' படத்திற்குப் பிறகு விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தில் உள்ளது. 

  இதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடிக்கிறார். மேலும் ராஜ்கிரன், சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பாக்டரி மூலம் தயாரித்திருக்கிறார்.

  இந்நிலையில், இப்படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 18ம் தேதி வெளியிட இருப்பதாக விஷால் அறித்துள்ளார். மேலும் இப்படத்தின் சிங்கிள் டிராக்கை விரைவில் வெளியிட இருப்பதாகவும் கூறியிருக்கிறார்.   இப்படத்தின் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. #Vishal #Sandakozhi2
  Next Story
  ×