search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கவுதம் கார்த்திக்கை கலாய்த்து அரங்கத்தை சிரிப்பலையில் நனைய வைத்த சதீஷ்
    X

    கவுதம் கார்த்திக்கை கலாய்த்து அரங்கத்தை சிரிப்பலையில் நனைய வைத்த சதீஷ்

    கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகி இருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் சதீஷ், படக்குழுவை கலாய்த்து அரங்கத்தை சிரப்பலையால் நனைய வைத்தார். #MrChandramouli #GauthamKarthik
    திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் மிஸ்டர்.சந்திரமௌலி படம் வருகிற ஜூலை 6-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் கவுதம் ஜோடியாக ரெஜினாவும், முக்கிய கதாபாத்திரங்களில் வரலட்சுமி மற்றும் சதீஷ் நடித்துள்ளனர். படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. 

    இதில் நடிகர் சதீஷ் பேசியதாவது,

    `திரு பேசும் கவுதம் கார்த்திக் இதுவரை நிறைய படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று சொன்னார். ஆனால் முந்தைய படங்களில் எல்லாம் கவுதம் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹரஹர மஹாதேவகி என அவர் ரியாலாகவே நடித்திருந்தார். கவுதமுக்கு இது எல்லாம் ஈசி. ஆனால் இந்த படத்தில் உண்மையாகவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். பாக்ஸிங்குக்காக உடற்பயிற்சி செய்து கடுமையாக உழைத்திருக்கிறார். படத்தில் 2 ஹீரோயின்கள் இருந்தும், அவர் தான் அழகாக இருப்பார். 



    படப்பிடிப்பில் கார்த்திக் சாரை பார்த்தாலே ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். அவரிடம் முத்தம் வாங்க நாங்க தினமும் காத்திருப்போம். டார்லிங் என கூப்பிட்டு அவர் கொடுக்கும் முத்தம் தான் எங்களுக்கு உத்வேகம். இது எங்களுக்கு கிடைத்த பெருமை' என்றார். #MrChandramouli #GauthamKarthik

    Next Story
    ×