என் மலர்

  சினிமா

  அஜித் தவறவிட்டதை, தன் வசமாக்கிய நட்டி
  X

  அஜித் தவறவிட்டதை, தன் வசமாக்கிய நட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சதுரங்க வேட்டை மூலம் மிகவும் பிரபலமான நடிகர் நட்டி என்னும் நட்ராஜன், அஜித் தவறவிட்ட தலைப்பை தன் வசமாக்கி வைத்திருக்கிறார். #Natty #Ajith
  பிரபல ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜன், ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவரின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. பின்னர், ‘எங்கிட்ட மோதாதே’, ‘போங்கு’, ‘ரிச்சி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

  தற்போது நட்டி புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ‘காட் பாதர்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது சென்னையில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் நடந்து வருகிறது.

  ‘காட் பாதர்’ என்ற தலைப்பு, அஜித் நடிப்பில் உருவான படத்திற்கு முதலில் வைக்கப்பட்டது. வரி விலக்கு காரணமாக அந்த திரைப்படம் ‘வரலாறு’ என்று பெயர் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×