என் மலர்

  சினிமா

  கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்
  X

  கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  `இரும்புத்திரை' படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாக இருக்கும் `கொலைகாரன்' படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க நடிகர் அர்ஜுன் ஒப்பந்தமாகி இருக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun
  விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான காளி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், விஜய் ஆண்டனி தற்போது கணேசா இயக்கத்தில் ‘திமிரு பிடிச்சவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். 

  இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். ஆண்ட்ரூ இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்க இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். தற்போது படக்குழு அதனை உறுதிப்படுத்தியுள்ளது. தியா மூவிஸ் சார்பில் பிரதீப் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். 



  விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான `இரும்புத்திரை' படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அர்ஜுன் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

  விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை முடித்த பிறகு விஜய் ஆண்டனி `மூடர்கூடம்' நவீன் இயக்கத்தில் ஒரு படத்திலும், `திருடன்' என்ற படத்திலும் நடிக்க இருக்கிறார். #Kolaikaran #VijayAntony #Arjun

  Next Story
  ×