என் மலர்
சினிமா

மிஸ்டர்.சந்திரமௌலி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
திரு இயக்கத்தில் கார்த்திக், கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் `மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #MrChandramouli
திரு இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `மிஸ்டர்.சந்திரமௌலி'. கார்த்திக்கும், கவுதம் கார்த்திக்கும் முதல்முறையாக இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் ஜூலை 6-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், சதீஷ், இயக்குநர்கள் மகேந்திரன், அகத்தியன், விஜய் சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கவுதம் கார்த்திக் இந்த படத்தில் பாக்ஸராக நடித்துள்ளார்.
சாம்.சி.எஸ். இசையில் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. ரிச்சர்டு எம்.நாதன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். #MrChandramouli #ReginaCassandra
Next Story






