search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காமெடியும் இல்லை, காமெடியன்களும் இல்லை - தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி?
    X

    காமெடியும் இல்லை, காமெடியன்களும் இல்லை - தமிழ் சினிமாவின் எதிர்காலம் எப்படி?

    தமிழ் சினிமாவில் வாரத்திற்கு 4 முதல் 5 படங்கள் ரிலீசாகி வரும் நிலையில், காமெடியன்கள் ஹீரோவாக படையெடுக்கும் நிலையில், வரும் காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடியும், காமெடியன்களும் இல்லை என்ற நிலை வரலாம். #YogiBabu #RJBalaji
    தமிழ் சினிமாவில் ஆண்டுக்கு 200 படங்களுக்கும் மேல் வெளியாகின்றன. ஆனால் அவற்றில் கால்வாசி கூட வெற்றி பெறுவதில்லை. காரணம் குடும்ப ரசிகர்களை இழந்தது தான். குடும்ப ரசிகர்களுக்கு படங்களில் நகைச்சுவை இருப்பது அவசியம். மனம் விட்டு சிரித்து ரசித்து மகிழத் தான் விரும்புவார்கள். ஆனால் தமிழ் சினிமா காமெடிக்கு ஆள் இல்லாமல் தவிக்கிறது.

    கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக், சந்தானம் வரிசையில் இப்போது ஆள் இல்லை. காரணம் காமெடியன்களுக்கு ஹீரோ ஆசையை உண்டாக்கி ஹீரோவாக மாற்றிவிடுகிறார்கள். சந்தானமும் வடிவேலுவும் ஹீரோவாக மாறிவிட்டார்கள். இந்த வரிசையில் இன்னும் சில காமெடியன்கள் இணைய இருக்கிறார்கள்.



    காமெடி நடிகர் கருணாகரன் பொது நலன் கருதி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். காமெடியனாக சில படங்களில் நடித்த ஜெகன் ’இன்னும் கல்யாணம் ஆகல’ என்ற படத்தில் ஹீரோவாகி விட்டார். நயன் தாராவுடன் யோகி பாபு நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுவுக்கு நயனை காதலிக்கும் வேடம். இந்த படத்தில் ஹீரோ இல்லை. இப்போது ஆர்ஜே பாலாஜியும் எல்கேஜி என்னும் படத்தில் ஹீரோவாகி விட்டார். அடுத்து சூரி, சதீஷும் ஹீரோவாக களம் இறங்க யோசித்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் காமெடியும் இல்லை. காமெடியன்களும் இல்லை என்ற நிலை வரப்போகிறது. #YogiBabu #RJBalaji

    Next Story
    ×