என் மலர்
சினிமா

பிரம்மாண்ட அரங்கில் உருவாகும் ஜீவாவின் ‘கொரில்லா’
டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் `கொரில்லா' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து முடிந்த நிலையில், அடுத்தக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்ட அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. #Gorilla #Jiiva
ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘கொரில்லா’. ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ராதாரவி நடிக்கிறார்.
படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது, ‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள் இணைந்து நடிக்கும், இந்த கொரில்லா படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்று முடிவடைந்தது.
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக நூற்றுக்கணக்கான திரைப்பட தொழிலாளர்களின் உழைப்பில் சென்னையின் புறநகரில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்த அரங்கத்தில் நடிகர்கள் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் ராதாரவி ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர் நடிகைகள் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

படப்பிடிப்பு முடிந்தவுடன் ‘கொரில்லா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் வெளியிடப்படும்.’ என்றார். டான் சாண்டி இயக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்கிறார். #Gorilla #Jiiva
Next Story






