என் மலர்tooltip icon

    சினிமா

    விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி
    X

    விவேக் படத்துக்காக இணையும் சிம்பு, விஷால், கார்த்தி

    வி.பி.விஜி இயக்கத்தில் விவேக், தேவயானி நடிப்பில் உருவாகி வரும் ‘எழுமின்’ படத்தின் டிரைலரை நடிகர்கள் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி இணைந்து வெளியிடுகின்றனர். #Ezhumin #Vivekh
    வையம் மீடியாஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘எழுமின்’. சமீபத்தில் வெளியான ‘உரு’ படத்தை தயாரித்த வி.பி.விஜி இயக்கியிருக்கும் இந்த படத்தில் விவேக், தேவயானி, பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

    கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு கணேஷ் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை பற்றிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெறும் எழுச்சி மிகு பாடல் ஒன்றை யோகி பி பாடி இருக்கிறார். 



    இந்த படத்தின் டிரைலர் வருகிற மே 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், இந்த டிரைலரை நடிகர் சிம்பு, விஷால் மற்றும் கார்த்தி இணைந்து வெளியிடுகின்றனர். #Ezhumin #Vivekh

    Next Story
    ×