என் மலர்
சினிமா

முதலில் அவர்கள் சம்பளத்தை சொல்லட்டும் - ரகுல்ப்ரீத் சிங்
முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ரகுல்ப்ரீத் சிங் சம்பளம் பற்றிய கேள்விக்கு முதலில் அவர்கள் சொல்லட்டும் என்று காட்டமாக பதிலளித்துள்ளார். #RakulPreetSingh
தமிழ் சினிமாவில் 40 நாட்களுக்கு மேல் நடந்த வேலை நிறுத்தத்துக்கு பிறகு நடிக, நடிகைகள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த நடிகை ரகுல்ப்ரீத் சிங், ‘முதல்ல நடிகர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குறாங்கனு வெளிப்படையா சொல்லட்டும். அதுக்கப்பறம் நடிகைகளோட சம்பளத்தைக் கேளுங்க. கண்டிப்பா நடிகர்களைவிட நாங்க பல மடங்கு குறைவாதான் சம்பளம் வாங்குறோம். ஆனா, சினிமாத் துறையினர் எல்லாருமே வருமானவரியைச் சரியா கட்டுறோம். அதனால, சம்பளத்தை வெளியே சொல்றதுல எந்தவிதத் தவறும் இல்லை.
எல்லா நடிகர்களும் முன்வந்து சொல்லட்டும், நானும் சொல்றேன்!’ என்று அதிரடியாக சொல்லி இருக்கிறார். சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ரகுல்ப்ரீத் சிங்கே நடிகர்களின் சம்பளம் பற்றி சர்ச்சையான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
Next Story






