என் மலர்
சினிமா

நாளை செம போதயோடு வரும் அதர்வா
பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை ரிலீசாக இருக்கிறது. #SemmaBothaAagathey #Atharvaa
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படத்தின் புதிய டிரைலர் ஒன்று நாளை மாலை 6 மணிக்கு ரிலீசாக இருப்பதாக நடிகர் அதர்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. #SemmaBothaAagathey #Atharvaa
Next Story






