search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அமலாபாலின் தைரியத்தை பாராட்டிய நடிகர் சங்கம்
    X

    அமலாபாலின் தைரியத்தை பாராட்டிய நடிகர் சங்கம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசில் பிடித்துக் கொடுத்த நடிகை அமலாபாலின் தைரியத்தை பாராட்டி நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. #Amalapaul
    மலேசியாவில் நேற்று இரவு நட்சத்திர கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கலைஞர்களின் நடன ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு நடன பள்ளியில் நடந்தது. இதில், நடிகை அமலாபாலும் கலந்து கொண்டார்.

    அவர் நடன ஒத்திகையில் ஈடுபட தயாராகிக் கொண்டிருந்தபோது, அவரிடம் வந்து பேசிய ஆசாமி ஒருவர், “மலேசியாவுக்கு நீங்கள் வரும்போது, உங்களை சந்திக்க கோடீஸ்வரர் ஒருவர் விரும்புகிறார். அதற்காக நிறைய பணம் கொடுப்பார்” என்று ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அமலாபால், அந்த ஆசாமியை அருகில் இருந்தவர்கள் உதவியுடன் போலீசில் பிடித்துக்கொடுத்தார். மேலும், மாம்பலம் போலீஸ் நிலையத்திற்கே வந்து தனது கைப்பட அந்த ஆசாமியை பற்றி புகார் கடிதமும் எழுதிக் கொடுத்தார்.

    அதனைத் தொடர்ந்து, அமலாபாலிடம் தவறான முறையில் நடந்து கொண்ட அழகேசன் (வயது 42) என்பவரை போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



    இந்த நிலையில், நடிகை அமலாபாலின் துணிச்சலான நடவடிக்கைக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சமீபத்தில் பிரபல நடிகை அமலாபால் தனக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக வெளிப்படையாக அறிவித்தார். மேலும், காவல் துறையிடம் புகாரும் அளித்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நேரடியாக விசாரித்து அந்த நபரை கைது செய்தனர்.

    காவல் துறையின் விரைவான நடவடிக்கைக்கு நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்ததோடு, பல நடிகைகள் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றி வெளியில் சொல்ல பயந்தாலும் நடிகை அமலாபால் தைரியமாக புகார் செய்ததற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×