என் மலர்tooltip icon

    சினிமா

    கைவசம் 7 படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி
    X

    கைவசம் 7 படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி

    சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்து உயர்ந்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், அவரது கைவசம் தற்போது 7 படங்கள் இருக்கின்றன.
    திரை உலக பின்புலம் இல்லாமல் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்திருப்பவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கதை தேர்வும், யதார்த்த நடிப்பும் இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    விஜய்சேதுபதி நடிப்பில் தயாராகி உள்ள ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன்’ படம் பிப்ரவரி 2-ந் தேதி திரைக்கு வருகிறது. இவர் ஏற்கனவே நடித்து சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் ‘இடம் பொருள் ஏவல்’ படமும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.



    தற்போது ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘மாமனிதன்’, ‘ஜுங்கா’, ‘சீதகாதி’, மணிரத்தினம் படங்களில் நடிக்கிறார். இதுதவிர தெலுங்கு, தமிழில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிக்க இருக்கிறார். இதையும் சேர்த்தால் 7 படங்கள் விஜய்சேதுபதி கைவசம் உள்ளன.

    வேறுசில படங்களிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ள இவர், 2019 வரை கை நிறைய படங்களை வைத்திருக்கிறார். ஏற்கனவே 2 படங்கள் வெளியாக இருக்கும் நிலையில், அடுத்தடுத்து 7 படங்கள் வர இருப்பது தமிழ் பட திரை உலகினரை விஜய்சேதுபதியை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    Next Story
    ×