என் மலர்tooltip icon

    சினிமா

    அக்‌ஷய் குமார் படத்தில் ஜெயம்ரவி?
    X

    அக்‌ஷய் குமார் படத்தில் ஜெயம்ரவி?

    வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் ஜெயம் ரவி, அடுத்ததாக அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற `பேபி' படத்தின் ரீமேக்கில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
    ஜெயம் ரவி நடிப்பில் `டிக் டிக் டிக்' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. ஜெயம் ரவி தற்போது புதுமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் `அடங்க மறு' படத்தில் நடித்து வருகிறார். ஜெயம் ரவி போலீசாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். 

    இந்த படத்தை முடித்த பிறகு சுந்தர்.சி. இயக்கத்தில் `சங்கமித்ரா' பிரமாண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார். `சங்கமித்ரா' படத்திற்காக சுமார் 6 மாதங்களை ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அந்த படத்தை முடித்த பிறகு ரீமேக் படம்மொன்றில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

    அக்‌ஷய் குமார் நடிப்பில் கடந்த 2015-ல் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற `பேபி' படத்தின் ரீமேக்கில் ஜெயம்ரவி நடிக்க இருப்பதாக செய்திகள் உலா வந்தன. மேலும் அந்த படத்தை `என்றென்றும் புன்னகை', `மனிதன்' படங்களை இயக்கிய அகமது இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இயக்குநர் அகமது அந்த தகவலை மறுத்திருக்கிறாராம். ஆனால் ஜெயம் ரவியுடன் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையில் விரைவில் இணையவிருப்பதாகவும் கூறப்படுகிறது.



    `சங்கமித்ரா' படத்தை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் ஜெயம் ரவி, மோகன் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படம் `தனி ஒருவன்-2' ஆக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அகமது இயக்கத்திலும் ஜெயம் ரவி நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    Next Story
    ×