search icon
என் மலர்tooltip icon

    சினிமா (Cinema)

    கார்த்தியுடன் டூயட் பாட தயாராகும் ப்ரியா பவானி ஷங்கர்
    X

    கார்த்தியுடன் டூயட் பாட தயாராகும் ப்ரியா பவானி ஷங்கர்

    மேயாத மான் படத்தை தொடர்ந்து நடிகை ப்ரியா பவானி ஷங்கர் அடுத்ததாக கார்த்தி ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
    சின்னத்திரையில் நாடகங்களில் நடித்து பிரபலமாகியவர் பிரியா பவானி ஷங்கர்.

    தற்போது மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். ரத்ன குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் வைபவ் ஜோடியாக நடித்திருக்கும் ப்ரியாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அடுத்தடுத்து படவாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

    அந்த வகையில் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் கார்த்தி ஜோடியாக நடிக்க ப்ரியா பவானி ஷங்கர் ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தமாகி இருக்கிறார்.



    பெயரிடப்படாத இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

    Next Story
    ×