என் மலர்

  சினிமா

  தனது வெற்றிக்கான ரகசியத்தை கூறிய நிக்கி கல்ராணி
  X

  தனது வெற்றிக்கான ரகசியத்தை கூறிய நிக்கி கல்ராணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை நிக்கி கல்ராணி தனது வெற்றிக்கான ரகசியம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார்.
  தமிழ், தெலுங்கு, மலையாள பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் நிக்கி கல்ராணி. 3 வருடங்களில் 25 படங்களில் நடித்துள்ள இவர் தனது அனுபவம் பற்றி கூறுகிறார்....

  “கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதில் தான் வெற்றி இருக்கிறது. எனவே இதற்கான வழிகளில் நான் கவனம் செலுத்துகிறேன்.

  தற்போது படங்களை கவனமாக தேர்வு செய்கிறேன். எண்ணிக்கையை விட நல்ல படங்களில் நடிப்பது முக்கியம். எனவே, வேடங்களை சரியாக தேர்ந்து எடுத்து நடிக்கிறேன். நான் இதுவரை 25 படங்களில் நடித்து இருக்கிறேன். இதில் பெரும்பாலானவை வெற்றிப்படங்கள். எனவே நான் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருப்பதாக எண்ணுகிறேன்.

  கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நடித்துள்ள ‘டீம்-5’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜீவாவுடன் ‘கீ’ படத்தில் நடிக்கிறேன். இது கலகலப்பான படம். விக்ரம் பிரபுடன் ‘நெருப்புடா’ படத்தில் நடிப்பு திறமையை காட்ட நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது”.

  Next Story
  ×