search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    மற்றொரு மாருதி காரை ரிபேட்ஜ் செய்யும் டொயோட்டா - வெளியீடு எப்போ தெரியுமா?
    X

    கோப்புப் படம் 

    மற்றொரு மாருதி காரை ரிபேட்ஜ் செய்யும் டொயோட்டா - வெளியீடு எப்போ தெரியுமா?

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ பிரீமியம் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் என்ற போதிலும், இன்விக்டோ மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் மாருதி சுசுகி Fronx-இன் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் புதிய டொயோட்டா கார் இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாடல் 1.2 லிட்டர் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

    சமீபத்தில் தான் மாருதி சுசுகி நிறுவனம் தனது இன்விக்டோ பிரீமியம் எம்பிவி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் என்ற போதிலும், இன்விக்டோ மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.

    கோப்புப் படம்

    டொயோட்டா நிறுவனம் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாருதி சுசுகி Fronx மாடலை இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இதுதவிர டொயோட்டா நிறுவனம் எர்டிகா மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனை உருவாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் மாருதி சுசுகி நிறுவனம் Fronx மற்றும் ஜிம்னி மாடல்களை அறிமுகம் செய்தது. இரு கார்களும் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செயய்யப்படுகிறது. புதிய Fronx மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த கார் பிரெஸ்ஸா கம்பேக்ட் எஸ்யுவி மாடலின் கீழ் நிலைநிறுத்தப்பட்டு உள்ளது.

    புதிய மாருதி சுசுகி Fronx மாடல் பிரீமியம் ஹேச்பேக் பலேனோவை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இரு மாடல்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்ப்பட்டு, குறைந்த எடை கொண்ட ஹார்டெக்ட் பிளாட்பார்ம் வழங்கப்படுகிறது. இதன் டொயோட்டா வெர்ஷனும் இதே ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்படுகிறது.

    Next Story
    ×