என் மலர்tooltip icon

    இது புதுசு

    விரைவில் இந்தியா வரும் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்
    X

    விரைவில் இந்தியா வரும் டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார்

    • டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் நான்கு சக்கர வாகனங்கள் பிரிவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்த நிலையில், புதிதாக டாடா டியாகோ எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் தனது புது வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புது எலெக்ட்ரிக் கார் டாடா டியாகோ EV பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த கார் இதே மாதம் இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த கார் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும்.

    தற்போது டாடா டிகோர் EV மற்றும் நெக்சான் EV என இரண்டு எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. முன்னதாக 2017 வாக்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டாடா டியாகோ EV கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்து இருந்தது. வரும் வாரங்களில் இந்த கார் முற்றிலும் வித்தியாசமான மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    புதிய டியாகோ EV மாடலில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டிகோர் EV மாடலில் இருப்பதை போன்ற பவர்டிரெயின் வழங்கப்படலாம். சிப்டிரான் சார்ந்த டிகோர் எலெக்ட்ரிக் செடான் மாடலில் 26 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 74 ஹெச்பி பவர், 170 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 306 கிமீ வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    இது மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வாடகை கார் ஓட்டுவோருக்காக டிகோர் EV X-Pres T EV மாடலையும் விற்பனை செய்து வருகிறது. இந்த மாடலில் 21.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள மோட்டார் 40 ஹெச்பி பவர், 105 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    Next Story
    ×