search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    500கி.மீ. ரேன்ஜ் வழங்கும் ஹேரியர் EV மாடல்.. இணையத்தில் லீக் ஆன புது தகவல்
    X

    500கி.மீ. ரேன்ஜ் வழங்கும் ஹேரியர் EV மாடல்.. இணையத்தில் லீக் ஆன புது தகவல்

    • எப்படி காட்சியளிக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
    • நெக்சான் EV மாடல் 465 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்கி வருகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹேரியர் EV எலெக்ட்ரிக் காரின் ப்ரோடக்ஷன் வெர்ஷனை டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைத்தது. கிட்டத்தட்ட உற்பத்திக்கு தயாரான நிலையில் டாடா ஹேரியர் EV மாடல் உண்மையில் எப்படி காட்சியளிக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இது அமைந்தது.

    அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், டாடா ஹேரியர் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 500 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. தற்போது டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் நெக்சான் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 465 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கி வருகிறது.


    அந்த வகையில், புதிய ஹேரியர் EV மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் நெக்சான் EV மாடலை விட அதிக ரேன்ஜ் வழங்கும் என்று கூறப்படுகிறது. டாடாவின் புதிய எலெக்ட்ரிக் காரின் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் டெம்பரேச்சர் காஜ், டைம், மொபைல் கனெக்டிவிட்டி, மியூசிக், நோட்டிஃபிகேஷன், ஹோம் மற்றும் சர்ச் போன்ற ஐகான்கள் இடம்பெற்றுள்ளன.

    ஹேரியர் EV மாடலில் முக்கோன வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், கிரில் பகுதியில் பிளான்க்டு-ஆஃப் டிசைன், புதிய அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள், முன்புறம் - பின்புறத்தில் எல்.இ.டி. பார்கள் வழங்கப்படுகின்றன.

    இன்டீரியரில் 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், முழுமையான டிஜிட்டல் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எலெக்ட்ரிக் பார்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டு அம்சம், வென்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், பானரோமிக் சன்ரூஃப், டிரைவ் மோட்கள், புதிய கியர் டயல் வழங்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×