search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    விரைவில் இந்தியா வரும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா - முன்பதிவு துவக்கம்
    X

    விரைவில் இந்தியா வரும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா - முன்பதிவு துவக்கம்

    • மாருதி சுசுசி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் ஜூலை 20 ஆம் தேதி இந்திய சந்தையில் தனது கிராண்ட் விட்டாரா மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கார் மாருதி சுசுகி நிறுவனத்தின் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடல் ஆகும். புதிய மாடலின் பெயர் அறிவித்தது மட்டும் இன்றி இதற்கான முன்பதிவுகளையும் மாருதி சுசுகி துவங்கி இருக்கிறது. அந்த வகையில் புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    புதிய எஸ்.யு.வி. மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பிரெஸ்ஸா மாடலின் மேல் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. இந்த கார் டொயோட்டா-சுசுகி கூட்டணியின் அங்கமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை தழுவி உருவாகி இருக்கும் மாருதி சுசுகி கார் ஆகும். இதன் தோற்றம் சற்றே வித்தியாசமாகவும், புதிய நிறங்களிலும் அறிமுகம் செய்யப்படலாம்.


    இதன் உற்பத்தி கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் பிடாடி ஆலையில் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலுடன் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 9 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே, வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் இருக்கை கவர்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடலில் 1.5 லிட்டர் மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. ஸ்டிராங் ஹைப்ரிட் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் e-CVT யூனிட் வழங்கப்பட இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடல் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், ஸ்கோடா குஷக், எம்.ஜி. ஆஸ்டர், போக்ஸ்வேகன் டைகுன் மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

    Next Story
    ×