என் மலர்

  இது புதுசு

  முழு சார்ஜ் செய்தால் 1202 கி.மீ. செல்லும் மெர்சிடிஸ் கார்
  X

  முழு சார்ஜ் செய்தால் 1202 கி.மீ. செல்லும் மெர்சிடிஸ் கார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் முழு சார்ஜ் செய்தால் ஆயிரம் கிலோமீட்டர்கள் ரேன்ஜ் வழங்கி அசத்தி இருக்கிறது.
  • முன்னதாக மற்றொரு மாடலும் இதே போன்று ஆயிரம் க.மீ. ரேன்ஜ் வழங்கி இருந்தது.

  மெர்டசிடிஸ் பென்ஸ் நிறுவனம் தனது விஷன் EQXX கார் மாடலை கொண்டு தனது முந்தையை சாதனையை முறியடித்து இருக்கிறது. முன்னதாக விஷன் EQXX மாடல் முழு சார்ஜில் 1000 கி.மீ. சென்ற நிலையில் தற்போது இதே கார் 1,202 கி.மீ. சென்று சாதனை படைத்து இருக்கிறது. இதற்கான சோதனை ஓட்டம் பிராக்லீயில் உள்ள எஃப்1 பந்தய களத்தில் நடைபெற்றது.


  இதை அடுத்து சில்வர்ஸ்டோன் எப்1 பந்தய களத்திலும் இந்த கார் சோதனை நடைபெற்றது. அதில் இந்த கார் 1202 கி.மீ. சென்று அசத்தியது. முதற்கட்டமாக பிரான்ஸ் நாட்டின் ஸ்டட்கர்ட்டில் இருந்து கேசிஸ் பகுதிக்கும் அதன் பின் யூரோடனலில் இருந்து கலாய்ஸ் பகுதிக்கும் சென்றது. லண்டனில் இந்த கார் ஃபோல்க்ஸ்டோனில் துவங்கி பிராக்லி வரை கடக்கப்பட்டது.

  2030 ஆண்டிற்குள் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முழுமையான எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளராக மாற முடிவு செய்து உள்ளது. மெர்சிடிஸ் நிறுவனம் தனது பேட்டரி பேக்கில் இருந்து முடிந்த வரை ஒவ்வொரு வாட் திறனையும் உறிஞ்சுவதற்கான பணிகளில் மெர்சிடிஸ் பென்ஸ் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் கிராண்ட் டூரிங் அனுபவம் எலெக்ட்ரிக் யுகத்திலும் தொடரும் என்றே தெரிகிறது.

  Next Story
  ×