search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    என்ட்ரி லெவல் பிரிவில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யும் மெர்சிடிஸ்
    X

    காப்புப் படம்

    என்ட்ரி லெவல் பிரிவில் புதிய எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யும் மெர்சிடிஸ்

    • மெர்சிடிஸ் EQXX மாடல் அந்நிறுவனத்தின் MMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.
    • புதிய EQXX மாடல் முழு சார்ஜ் செய்தால் 998 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முனிச் மோட்டார் விழாவில் முற்றிலும் புதிய என்ட்ரி லெவல் மாடலின் கான்செப்ட் காரை அறிமுகம் செய்ய முடிவு செய்து இருக்கிறது. புதிய கார் மெர்சிடிஸ் CLA எனும் பெயர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக இந்த மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தது.

    புதிய எலெக்ட்ரிக் கார் 2025 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் மெர்சிடிஸ் உருவாக்கிய எலெக்ட்ரிக் மற்று்ம மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் டிரைவ்டிரெயின்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 2025 ஆண்டிற்குள் அனைத்து பிரிவுகளிலும் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

    அந்த வகையில், புதிய கான்செப்ட் மாடலுடன் விஷன் EQXX மற்றும் விஷன் ஒன்-லெவன் போன்ற மாடல்களின் கான்செப்ட் வெர்ஷனும் முனிச் ஆட்டோ விழாவில் பிரீவியூ செய்யப்படலாம் என்று தெரிகிறது. EQA செடான் என்று அழைக்கப்படும் புதிய கான்செப்ட் மாடல் புதுமை, டிசைன் மற்றும் டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு வருகிறது. டெஸ்டிங்கில் இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 1202 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கியது.

    மெர்சிடிஸ் EQXX மாடல் அந்நிறுவனத்தின் MMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு மெர்சிடிஸ் அறிமுகம் செய்யும் ஐசி என்ஜின் கொண்ட மாடல்களுடன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. புதிய EQXX மாடல் முழு சார்ஜ் செய்தால் 998 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கின்றன.

    Next Story
    ×