என் மலர்
இது புதுசு

பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்
- மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்களை அப்டேட் செய்து இருக்கிறது.
- புதிய பென்ஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் மேம்பட்ட GLA மற்றும் GLB எஸ்யுவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய மாடல்களின் இந்திய விற்பனை இந்த ஆண்டிற்குள் துவங்கும் என தெரிகிறது. பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்களில் புதிய டிசைன் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் முன்புறம் புதிய கிரில், பம்ப்பர் டிசைன், லைட் சிக்னேச்சர் உள்ளிட்டவை புதிதாக வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் எல்இடி லைட்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. காரின் வெளிப்புற நிறம், வீல் ஆர்ச்களிலும் பூசப்பட்டு இருக்கிறது. இதன் முந்தைய வெர்ஷன்களில் பிளாஸ்டிக் ரிம்கள் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
காரின் உள்புறம் அதிக சவுகரியத்தை வழங்கும் இருக்கைகளுடன் லெதர் ஸ்டீரிங் வீல், ஹை-பீம் அசிஸ்ட், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. அனைத்து கார்களிலும் மேம்பட்ட MBUX இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், உள்புறம் ஆம்பியண்ட் லைட்டிங், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் GLA, GLB ஃபேஸ்லிஃப்ட் எஸ்யுவி மாடல்களில் மைல்டு ஹைப்ரிட் திறன் வழங்கப்படுகிறது. முதல் முறையாக இந்த கார்கள் பிளக்-இன் மற்றும் மைல்டு ஹைப்ரிட் வெர்ஷன்களில் கிடைக்கிறது. இந்த மாடல்களில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்கள் வழங்கப்படுகிறது. இவை 149 ஹெச்பி முதல் 264 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் என தெரிகிறது.
புதிய மைல்டு ஹைப்ரிட் மாடல்களில் 48 வோல்ட் பேட்டரி வழங்கப்படுகிறது. இவை காரின் செயல்திறனை 10 ஹெச்பி வரை அதிகரிக்கின்றன. இவை குறிப்பிட்ட சிறிது தூரம் வரை மின்சக்தியில் மூலம் பயணிக்க உதவுகிறது. புதிய GLA மற்றும் GLB மாடல்களின் செயல்திறன் மெர்சிடிஸ் AMG மூலம் டியூன் செய்யப்படுகின்றன.






