search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    550கிமீ ரேன்ஜ் வழங்கும் புது பென்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை ரூ. 1.39 கோடி தான்
    X

    550கிமீ ரேன்ஜ் வழங்கும் புது பென்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம் - விலை ரூ. 1.39 கோடி தான்

    • இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ்-இன் நான்காவது எலெக்ட்ரிக் கார் இது.
    • புதிய மெர்சிடிஸ் பென்ஸ் EQE ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய EQE எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எலெக்ட்ரிக் காரின் விலை ரூ. 1 கோடியே 39 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையின் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிறங்கிய நிலையில், இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் நான்காவது எலெக்ட்ரிக் கார் மாடலாக புதிய EQE அறிமுகமாகி இருக்கிறது. 2020 ஆண்டு முதலே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

    புதிய EQE மாடல் மெர்சிடிஸ் GLE எஸ்.யு.வி.-இன் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். இந்த மாடல் EQB மற்றும் EQS மாடல்களின் இடையில் நிலைநிறுத்தப்படுகிறது. தோற்றத்தில் இந்த மாடல் EQS போன்றே காட்சியளிக்கிறது. இதன் வெளிப்புறம் மூடப்பட்ட நிலையில் முன்புற கிரில், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், டிஜிட்டல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஃபிளஷ் டோர் ஹேண்டில்கள், 20 இன்ச் அளவில் ஏரோ அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    இந்த எஸ்.யு.வி. மாடலின் உள்புறம் டூயல் ஸ்கிரீன்கள்- இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் MBUX சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை வயர்லெல் சார்ஜர், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், பானரோமிக் சன்ரூஃப் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் மெர்சிடிஸ் பென்ஸ் EQE மாடல் முழுமையாக லோட்-செய்யப்பட்ட ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இது EQE 500 பிளஸ் 4 மேடிக் என்று அழைக்கப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் காரில் 90.5 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 408 ஹெச்.பி. பவர், 858 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×