search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    மெர்சிடிஸ் AMG SL55 ரோட்ஸ்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம்
    X

    மெர்சிடிஸ் AMG SL55 ரோட்ஸ்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம்

    • மெர்சிடிஸ் நிறுவனத்தின் புதிய ரோட்ஸ்டர் மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ வி8 என்ஜின் உள்ளது.
    • இந்த காரின் சாஃப்ட் டாப் 15 நொடிகளில் திறந்து, மூடிக்கொள்ளும் வசதி கொண்டிருக்கிறது.

    மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் AMG SL55 ரோட்ஸ்டர் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மாடலின் விலை ரூ. 2 கோடியே 35 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய 7th Gen மாடல் 2021 வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் CBU முறையில் களமிறங்கும் மெர்சிடிஸ் AMG SL55 மாடல் இரண்டு வேரியண்ட்கள், எட்டு வெளிப்புற நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    முற்றிலும் புதிய மெர்சிடிஸ் AMG SL55 ரோட்ஸ்டர் மாடலில் ஸ்வெப்ட்-பேக் எல்இடி ஹெட்லேம்ப்கள், பானமெரிக்கன் கிரில், கிளாஸ் பிளாக் ORVM-கள், பிளாக்டு-அவுட் 20-இன்ச் அலாய் வீல்கள், சிவப்பு அல்லது மஞ்சள் நிற பிரேக் கேலிப்பர்கள், குவாட் டிப் எக்சாஸ்ட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஸ்பாயிலர், ராப்-அரவுன்ட் எல்இடி டெயில் லைட்கள் உள்ளன.

    இந்த காரை மணிக்கு 60 கிலோமீட்டர்கள் வேகத்தில் இயக்கும் போதிலும், சாஃப்ட் டாப்-ஐ 15 நொடிகளில் திறக்கவோ அல்லது மூடவோ முடியும். இது பிளாக், கிரே மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய AMG SL55 ரோட்ஸ்டர் மாடலில் AMG பெர்ஃபார்மன்ஸ் சீட்கள், கார்பன் ஃபைபர் மற்றும் அலகான்ட்ரா இன்சர்ட்கள், AMG சார்ந்த இன்டீரியர்கள் வழங்கப்படுகின்றன.

    இத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 11.9 இன்ச் செங்குத்தாக பொருத்தப்பட்ட MBUX டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட்டிங் மற்றும் HUD உள்ளது. பாதுகாப்புக்கு எட்டு ஏர்பேக், பிரீ சேஃப் சிஸ்டம், பெடஸ்ட்ரியன் பாதுகாப்பு, ஆக்டிவ் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.

    புதிய மெர்சிடிஸ் பென்ஸ் AMG SL55 ரோட்ஸ்டர் மாடலில் 4.0 லிட்டர், டுவின் டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 473 ஹெச்பி பவர், 700 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 295 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×