search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஸ்கார்பியோ பிரான்டிங்கில் புது மாடல் - டிரேட்மார்க் செய்த மஹிந்திரா
    X

    ஸ்கார்பியோ பிரான்டிங்கில் புது மாடல் - டிரேட்மார்க் செய்த மஹிந்திரா

    • ஸ்கார்பியோ பிரான்டு விரிவுப்படுத்தப்படும் என மஹிந்திரா அறிவித்தது.
    • தென் ஆப்பிரிக்காவில் ஸ்கார்பியோ பிக்-அப் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது.

    மஹிந்திரா நிறுவனம் ஸ்கார்பியோ எக்ஸ் (Scorpio X) என்ற பெயரை தனது புதிய மாடலில் பயன்படுத்துவதற்காக டிரேட்மார்க் பெற்றுள்ளது. எதிர்காலத்தில் ஸ்கார்பியோ பிரான்டு விரிவுப்படுத்தப்படும் என மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.

    மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ நிகழ்வில் குளோபல் பிக்-அப் கான்செப்ட் மாடலையும் காட்சிப்படுத்தியது. அந்த வரிசையில், பிக்-அப் கான்செப்ட் மாடலுக்கு ஸ்கார்பியோ எக்ஸ் பெயர் சூட்டப்படலாம் என கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஸ்கார்பியோ பிக்-அப் கான்செப்ட் காட்சிப்படுத்தப்பட்டது.


    இந்த மாடல் தென் ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு போன்ற சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய பிக்-அப் ஸ்கார்பியோ எக்ஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த மாடல் அடுத்த தலைமுறை லேடர் ஃபிரேமில் உருவாக்கப்படுவதும் உறுதியாகி இருக்கிறது.

    புதிய ஸ்கார்பியோ எக்ஸ் மாடலில் ஜென் 2 ஆல்-அலுமினியம் எம்ஹாக் டீசல் என்ஜின் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் 4-வீல் டிரைவ், நான்கு டிரைவ் மோட்கள் வழங்கப்படும் என தெரிகிறது. சந்தையை பொருத்து இந்த மாடல் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

    Next Story
    ×