search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    ரூ. 5.99 லட்சம் தான்.. இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் எக்ஸ்டர்!
    X

    ரூ. 5.99 லட்சம் தான்.. இந்தியாவில் அறிமுகமான ஹூண்டாய் எக்ஸ்டர்!

    • ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் ஆறு மோனோடோன் மற்றும் மூன்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது.
    • புதிய எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் உள்ளது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்டர் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலின் விலை அறிமுக சலுகையாக ரூ. 5.99 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் ஆறு மோனோடோன் மற்றும் மூன்று டூயல் டோன் நிறங்களில் கிடைக்கிறது. இவை அட்லஸ் வைட் டைட்டன் கிரே, ஸ்டேரி நைட், காஸ்மிக் புளூ, ஃபியெரி ரெட், ரேஞ்சர் காக்கி, அட்லஸ் வைட் - டூயல்-டோன் ரூஃப், காஸ்மிக் புளூ - டூயல்-டோன் ரூஃப் மற்றும் ரேஞ்சர் காக்கி - டூயல்-டோன் ரூஃப் ஆகும்.

    இந்த மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், H வடிவம் கொண்ட எல்இடி டிஆர்எல்கள், டெயில் லைட்கள், அகலமான பாராமெட்ரிக் கிரில் டிசைன், ஸ்போர்ட் ரூஃப் ஸ்பாயிலர், 15-இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் ரியர் ஏசி வென்ட்கள், பவர் அவுட்லெட், ஆறு ஏர்பேக், டிபிஎம்எஸ், இன்பில்ட் நேவிகேஷன், 60-க்கும் அதிக கனெக்டெட் கார் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    காரின் உள்புறம் எலெக்ட்ரிக் சன்ரூஃப், டேஷ்கேம், 8-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜர், ஆல்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், குரூயிஸ் கன்ட்ரோல், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ஃபூட்வெல் லைட்டிங் உள்ளது. பாதுகாப்பிற்கு ஆறு ஏர்பேக், ESC, VSM, HAC, ரிவர்ஸ் பார்கிங் கேமரா, பார்கிங் சென்சார்கள் உள்ளன.

    புதிய எக்ஸ்டர் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜின் உள்ளது. இந்த என்ஜின் 81 ஹெச்பி பவர், 114 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல், AMT யூனிட் வழங்கப்படுகிறது. மேலும் ஃபேக்ட்ரி-ஃபிட் செய்யப்பட்ட CNG கிட் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×