என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இது புதுசு
ஹூண்டாய் கிரெட்டா N இந்திய முன்பதிவு துவக்கம்..
- ஹூண்டாய் பிரான்டிங்கில் மூன்றாவது N சீரிஸ் மாடல் இது.
- கிரெட்டா N லைன் மாடலின் புகைப்படங்கள் வெளியானது.
ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா N லைன் மாடலுக்கான முன்பதிவை துவங்கியது. புதிய காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் மார்ச் 11-ம் தேதி புதிய கிரெட்டா N லைன் மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஹூண்டாய் பிரான்டிங்கில் மூன்றாவது N சீரிஸ் மாடலாக கிரெட்டா அறிமுகமாக உள்ளது.
புதிய கிரெட்டா N லைன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் ஸ்போர்ட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. முன்னதாக ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா N லைன் மாடலின் புகைப்படங்களை வெளியிட்டது. இதன் முன்புறம் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் புதிய கிரில் மற்றும் பம்ப்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெட்லேம்ப் மற்றும் எல்.இ.டி. லைட்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த காரின் பிரேக் கேலிப்பர்கள் சிவப்பு நிறம் கொண்டிருக்கின்றன. பின்புறம் ரூஃப்-இல் ஸ்பாயிலர் உள்ளது. இத்துடன் ஸ்போர்ட் பம்ப்பர், டிஃப்யூசர் உள்ளது. கிரெட்டா N லைன் மாடல் தண்டர் புளூ மற்றும் பிளாக் ரூஃப் எனும் புதிய ஆப்ஷனில் கிடைக்கிறது.
புதிய கிரெட்டா N லைன் மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 160 ஹெச்.பி. பவர், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படும் என்று தெரிகிறது.