search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    பண்டிகை காலத்தில் இந்தியா வரும் புதிய 5 சீரிஸ் மாடல் - பி.எம்.டபிள்யூ. அசத்தல் திட்டம்
    X

    பண்டிகை காலத்தில் இந்தியா வரும் புதிய 5 சீரிஸ் மாடல் - பி.எம்.டபிள்யூ. அசத்தல் திட்டம்

    • பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல் மூன்று வெர்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
    • இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் முழு சார்ஜ் செய்தால் 582 கி.மீ. ரேன்ஜ் வழங்கும்.

    பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது 8-வது தலைமுறை 5 சீரிஸ் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த காருடன் அதன் எலெக்ட்ரிக் வெர்ஷனும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த கார் முற்றிலும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. நீட்டிக்கப்பட்ட வீல்பேஸ் உடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் பி.எம்.டபிள்யூ. கார் மாடல் என்ற பெருமையை புதிய 5 சீரிஸ் மாடல் பெற இருக்கிறது.

    புதிய 5 சீரிஸ் காரின் லாங்-வீல்பேஸ் வெர்ஷன் G60 5 சீரிஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. 5 சீரிஸ் LWB மாடலில் இலுமினேட் செய்யப்பட்ட கிரில், மெல்லிய டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் LWB 5175mm நீளமும், 1520mm உயரம், வீல்பேஸ் 3105mm அளவில் உள்ளது.


    இந்திய சந்தையில் பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் 520Li அல்லது 530Li, 520Ld வெர்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது. இவற்றில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல், டீசல் என்ஜின்கள் வழங்கப்படும். இவற்றுடன் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    பி.எம்.டபிள்யூ. i5 மாடல் இ-டிரைவ்40 வடிவில் கிடைக்கும் என்றும் இதில் 340 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் மோட்டார் மற்றும் 81.2 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 582 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று பி.எம்.டபிள்யூ. தெரிவித்துள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ. 5 சீரிஸ் மாடல்கள் பண்டிகை காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×