search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    இந்திய டெஸ்டிங்கை துவங்கிய 2024 ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட்
    X

    இந்திய டெஸ்டிங்கை துவங்கிய 2024 ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட்

    • புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட டெயில்கேட் உள்ளது.
    • கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என தகவல்.

    ஹூண்டாய் கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது. புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலில் பலிசேட் சார்ந்த முகப்பு மற்றும் ADAS சூட் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சாலைகளில் கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

    இந்தியாவில் அறிமுகமாகும் கிரெட்டா மாடல் மற்ற ஆசிய நாடுகளில் விற்பனை செய்யப்படும் டக்சன் சார்ந்து உருவாக்கப்பட்ட கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் இல்லை. மாறாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் கிரெட்டா பேஸ்லிப்ட் மாடல் முற்றிலும் புதிய டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    மேலும் புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலில் 18 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட இருக்கிறது. 18 இன்ச் அலாய் வீல்களுடன் ஒருங்கிணைந்து இயங்குவதற்கு ஏதுவாக டிரைவ்டிரெயின் பாகங்கள் மற்றும் சஸ்பென்ஷன் டியூன் செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்த மாடலில் செங்குத்தாக இருக்கும் ஹெட்லைட் வழங்கப்பட்டு உள்ளது.

    இத்துடன் முற்றிலும் புதிய எல்இடி டிஆர்எல் லைட்கள், பாராமெட்ரிக் கிரில், முன்புறம் பார்க்கிங் சென்சார்கள் உள்ளன. அந்த வகையில் புதிய கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஸ்மார்ட்சென்ஸ் ADAS சூட் வழங்கப்படுகிறது. இதன் பின்புறம் ரிடிசைன் செய்யப்பட்ட டெயில்கேட் உள்ளது. இத்துடன் முற்றிலும் புதிய எல்இடி டெயில் லைட்கள் வழங்கப்படுகிறது.

    இவைதவிர 3-பாயின்ட் சீட் பெல்ட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்கள், 60:40 முறையில் ஸ்ப்லிட் செய்யப்பட்ட ரியர் இருக்கைகள், 2-ஸ்டெப் ரிக்லைன் வசதி கொண்ட இருக்கைகள் வழங்கப்படுகிறது.

    இத்துடன் பானரோமிக் சன்ரூஃப், ரியர் வின்டோ ஷேட்கள், ரியர் ஏசி வென்ட்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், வென்டிலேஷன், அளவில் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்இடி லைட்டிங் வழங்கப்படுகிறது.

    கிரெட்டா பேஸ்லிப்ட் மாடலில் 1.5 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    Photo Courtesy: Rushlane

    Next Story
    ×