என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்

டாடா பன்ச் CNG இந்திய முன்பதிவு தொடங்கிடுச்சி.. ஆனால் ஒரு டுவிஸ்ட்..!

- டாடா பன்ச் CNG மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
- டாடா பன்ச் CNG மாடல் ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பன்ச் CNG மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், டாடா பன்ச் CNG மாடலின் முன்பதிவு நாடு முழுக்க சில விற்பனை மையங்களில் மட்டும் துவங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனினும், டாடா மோட்டார்ஸ் இதுபற்றி எந்த தகவலும் வழங்கவில்லை. அந்த வகையில், தற்போதைய முன்பதிவுகள் அதிகாரப்பூர்வமற்ற நிலையில் நடைபெற்று வருகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் டாடா பன்ச் CNG மாடலுடன் அல்ட்ரோஸ் CNG மாடலும் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அல்ட்ரோஸ் CNG போன்றே பன்ச் CNG மாடலும் பல்வேறு வேரியன்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.
தற்போது பன்ச் CNG மாடல் விற்பனை மையங்களுக்கு வரத் துவங்கிய நிலையில், விரைவில் இதன் வெளியீடு நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். பன்ச் CNG மாடலில் ஆறு ஏர்பேக், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், 16-இன்ச் அலாய் வீல்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூப் வழங்கப்படுகிறது.
பன்ச் CNG மாடலில் 1.2 லிட்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. CNG மோடில் இந்த கார் 76 ஹெச்பி பவர், 97 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் டாடா பன்ச் மாடல் சிட்ரோயன் C3, மாருதி சுசுகி இக்னிஸ், நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. CNG மாடல் என்ற வகையில், இந்த கார் ஹூன்டாய் எக்ஸ்டர் CNG மாடலுக்கு போட்டியாக அமைகிறது.